/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாடார்மேட்டில் சாலை நடுவில் அகற்றப்படாத போர்வெல் பம்ப்
/
நாடார்மேட்டில் சாலை நடுவில் அகற்றப்படாத போர்வெல் பம்ப்
நாடார்மேட்டில் சாலை நடுவில் அகற்றப்படாத போர்வெல் பம்ப்
நாடார்மேட்டில் சாலை நடுவில் அகற்றப்படாத போர்வெல் பம்ப்
ADDED : நவ 04, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நஈரோடு மாநகராட்சி, 54வது வார்டு நாடார்மேடு அருகில் உள்ள, விநாயகர் கோவில் வீதியில் சாலை நடுவில் உள்ள போர்வெல் அடிப்பம்பால், போக்குவரத்துக்கு இடையறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த போர்வெல், 30 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் தேவைக்காக போடப்பட்டது. வீடு தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதாலும், தனித்தனியாக வீடுகளில் போர்வெல் போட்டுக்கொண்டதால் பயன்பாட்டில் இல்லாமல் போனது. இப்பகுதியில் பலமுறை தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தாலும், இதை ஏனோ அகற்றவில்லை. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இவ்வாறு கூறினர்.