ADDED : மே 27, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ராகினி. கட்டட தொழிலாளர்கள். இவர்களின் இளைய மகன் பவித்ரன், 6; நேற்று முன்தினம் மாலை விளையாட சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெற்றோர் மகனை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்பகுதியில் உள்ள சிசிசிவி கேமராக்களை ஆய்வு செய்தகதில், அருகேயுள்ள கிணற்றில் விளையாடிய போது தவறி விழுந்தது தெரியவந்தது. பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி சிறுவன் சடலத்தை மீட்டனர். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
