சிறுவன், தொழிலாளி தற்கொலை மனமுடைந்ததால் விபரீத முடிவு
சிறுவன், தொழிலாளி தற்கொலை மனமுடைந்ததால் விபரீத முடிவு
ADDED : மார் 18, 2026 08:00 AM
சென்னிமலை:சென்னிமலை,
அரச்சலூர் ரோட்டில் பாஸ்ட் புட் ஓட்டல் நடத்-துபவர் முருகேசன், 39;
இவரது மகன் வருண், 15; காமராஜ் நகர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த
நிலையில், ஆறு மாதமாக பள்ளி செல்லாமல், தந்தைக்கு உதவியாக
இருந்தார்.
நேற்று முன்தினம் பகலில், ஓட்டல் வேலைகளை கவனிக்காமல் வருண்
துாங்கியுள்ளார். இதை பார்த்த முருகேசன், 'இப்படி தூங்கினால் கடையை
எப்படி நடத்த முடியும்?' என்று வருணை கண்டித்-துள்ளார். இதனால்
அன்றிரவே, ஓட்டல் பொருட்கள் வைக்கும் அறை ஷட்டர் கதவை உள்பக்கமாக
பூட்டிக்கொண்டு, தங்-கையின் துப்பட்டாவில் வருண் துாக்கிட்டு
கொண்டதில் இறந்து விட்டார். இதுகுறித் புகாரின்படி சென்னிமலை
போலீசார் விசா-ரிக்கின்றனர்.
* பெருந்துறையை அடுத்த
தோப்புபாளையத்தை சேர்ந்தவர் கன-கராஜ், 45, கூலி தொழிலாளி. அதே
தெருவைச் சேர்ந்த சின்ராசு என்பவரிடம், சீட்டு போட்டு வந்தார். இரு
தவணைகளை கட்ட முடியாமல் காலம் தாழ்த்தியுள்ளார். இந்நிலையில் நேற்று
முன்-தினம் இரவு, கனகராஜ் வீட்டுக்கு சென்ற மனைவியுடன் சென்ற
சின்ராசு சத்தம் போட்டுள்ளார்.
அப்போது கனகராஜின் இரண்டு குழந்தைகள்
இருந்துள்ளன. அவர்கள் முன்னிலையில் சின்ராசு சத்தம் போட்டதால்
மனமுடைந்த கனகராஜ், வீட்டுக்குள் சென்று துாக்கிட்டு கொண்டார்.
கனகராஜ் மனைவி சகுந்தலா, சின்ராசு மற்றும் அவர் மனைவி உதவியுடன் கதவை
உடைத்து அவரை மீட்டனர். சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவ
பரி-சோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
