/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
/
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 03, 2024 06:52 AM
காங்கேயம்: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சில்ட்ரன்ஸ் சார்டபிள் டிரஸ்ட் சார்பில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, காங்கேயத்தில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதையொட்டி காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள தாய்மார் பாலுாட்டும் அறை புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பேரணியை நகராட்சி தலைவர் சூர்யாபிரகாஷ் துவக்கி வைத்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனாம்பாள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளர் ருக்மணி முன்னிலை வகித்தனர். தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் வெள்ளகோவிலில் நடந்த பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவேந்திரன் துவக்கி வைத்தார். இதில் சில்ட்ரன் சாரிடபுள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வெள்ளகோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லாவண்யா உட்பட அங்கன்வாடி பணியாளர் கலந்து கொண்டனர்.