/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
/
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 05, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார். பிறகு, 10 கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து தாய்ப்பால் வார உறுதிமொழி ஏற்கப்பட்டது. நர்சிங் கல்லுாரி மாணவிகள், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு பேரணி மாநகராட்சி அலுவலகம் முன் நிறைவு பெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேசன், மவட்ட குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் பணி திட்ட அலுவலர் பூங்கோதை, மற்றும் பலர் பங்கேற்றனர்.

