ADDED : அக் 14, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி, ஆசனுார் கிராமம் அரேபா-ளையம், சீஹட்டியை சேர்ந்தவர் ஆனந்தன். மாமனாரின் தந்தை இறப்புக்கு வாரிசு சான்றிதழ் பெற, ஆசனுார்
வி.ஏ.ஓ., ருத்ர செல்வனை அணுகினார். இதற்காக, ௫௦ ஆயிரம் லஞ்சம் கேட்-கவே, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். அவர்கள் திட்டப்படி கடந்த, 5ம் தேதி பணத்தை கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், ருத்ர செல்வனை கையும் களவுமாக கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வி.ஏ.ஓ.,வை சஸ்பெண்ட் செய்து, கோபி ஆர்.டி.ஓ., உத்தரவிட்-டுள்ளார்.