ஊழியருக்கு போனில் 'தொல்லை'வே-பிரிட்ஜ் உரிமையாளர் கைது
ஊழியருக்கு போனில் 'தொல்லை'வே-பிரிட்ஜ் உரிமையாளர் கைது
ADDED : மே 26, 2026 04:38 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரதில், வே-பிரிட்ஜ் நடத்தி வருபவர் கோவிந்தசாமி, 44; தாராபுரம் அண்ணாநகரை சேர்ந்த திருமணமான, 26 வயது பெண் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பினார்.
கோவிந்தசாமி மொபைல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தவர் தாராபுரம் போலீசில் புகார் செய்தார். இளம்பெண் ஆதாரமாக தந்த மொபைல் ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், கோவிந்தசாமியை கைது செய்து, தாராபுரம் சிறையில்
அடைத்தனர்.
