/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷன் அரிசி கடத்திய அண்ணன்-தம்பி கைது
/
ரேஷன் அரிசி கடத்திய அண்ணன்-தம்பி கைது
ADDED : பிப் 21, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:ஈரோடு
மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன்
தலைமையிலான போலீசார், தாளவாடியை அடுத்த திகினாரை அரசுப்பள்ளி
அருகே, வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு டாடா
ஏஸ் வாகனத்தில், 23 மூட்டைகளில் 1,150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
வாகனத்தில்
கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த சகோதரர்கள் சபியுல்லா, 23,
முகமது உசேப், 26, இருந்தனர். இருவரையும் கைது செய்தனர்.தமிழகத்தில்
குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி கடத்தி சென்று, மைசூரு, டி.நரசிபுரா
பகுதியில் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
1,150 கிலோ ரேஷன் அரிசியை, வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

