ADDED : ஜூன் 23, 2026 01:14 AM
அ நிறம் | அளவு
கொடுமுடி; கொடுமுடியில் சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொடுமுடி, சென்னசமுத்திரம் மாாரியம்மன் கோவில் அருகே மெயின் வீதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராமலிங்கம், 32; இவரின் அண்ணன் சக்திவேல், 38, கட்டட மேஸ்திரி.சகோதரர்களிடையே ஓராண்டாக சொத்து பிரச்னை உள்ளது. ராமலிங்கம் குடைச்சல் கொடுத்ததால் சக்திவேல் ஆத்திரமடைந்தார். கடந்த, 20ம் தேதி இரவு ராமலிங்கத்தை மண்-வெட்டி பிடியால் சக்திவேல் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு ராமலிங்கம் அனுப்பி வைக்-கப்பட்டார். கொடுமுடி போலீசார் வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
