ADDED : நவ 12, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, பங்களாப்புதுார் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் நாகராஜன், 38. டிரைவர்; இவரது சகோதரர் அதே பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி, 46; எலக்ட்ரீசியன். சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்தது.
இந்நிலையில், 2022 நவ.,24ல் தகராறு ஏற்பட்டது. அப்போது தாக்கப்பட்டதில் நாகராஜன் இறந்தார். இதுகுறித்த வழக்கு கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நீதிபதி ராமச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். சஞ்சீவ் காந்திக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

