/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஈரோட்டில் பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 24, 2025 01:43 AM
ஈரோடு:
ஈரோடு காந்திஜி சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., - பென்ஷனர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு செயலர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன், மாநில துணைத் தலைவர் குப்புசாமி, மாநில உதவி செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர்.
ஓய்வூதியர்கள் டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் வழங்க, ஈரோடு கஸ்டமர் சர்வீஸ் சென்டரில் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் அமலாக்க வேண்டும். மெடிக்கல் கார்டு புதுப்பித்தலை கடந்தாண்டு வரை, துணை கோட்ட அலுவலகங்களில் செய்து வந்தனர். டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் வழங்கிய பின், அதன் நகலை இ-மெயில் மூலம் மாவட்ட அலுவலகத்தில் அல்லது துணை கோட்ட அதிகாரியிடம் வழங்க வேண்டும். இதில் நடை முறை பிரச்னை உள்ளதை சரி செய்ய வேண்டும்.
பி.எஸ்.என்.எல்., குடியிருப்பில் வசித்து, வீட்டை காலி செய்த பின்னும் வைப்பு தொகை வழங்காமல் உள்ளதை விடுவிக்க வேண்டும். மெடிக்கல் அலவன்ஸ்களை ஒவ்வொரு, 3 மாதத்துக்கு ஒருமுறை என முழுமையாக வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.