தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்கேயத்தில் காளை சிலை, எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

காங்கேயத்தில் காளை சிலை, எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

காங்கேயத்தில் காளை சிலை, எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு


ADDED : மார் 01, 2026 08:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 08:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: காங்கேயத்தில், காளை சிலை, எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.65 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள காளை சிலையும், நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தினுள் ரூ.83.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக கட்டடமும் நேற்று திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஈரோடு எம்.பி., பிரகாஷ், திருப்பூர் எம்.பி., சுப்பராயன், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல.பத்ம நாபன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில்,'' தமிழ்நாடு முதல்வர், பல நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த பல ஆண்டு களாக காங்கேயம் மக்களின் கோரிக்கையாக இருந்து வந்த, காங்கேயத்தின் அடையாளமான காளை மாட்டு சிலை அமைக்கும் கோரிக்கையை ஏற்று, சிலை அமைக்க ஒப்புதல் வழங்கிய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி. காளை சிலையும், காங்கேயம் எம்.எல்.ஏ., அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்டஇயக்குனர் சங்கமித்திரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துசரவணன், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், காளை சிலை அமைப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us