/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டும், குழியுமான சாலை; ஓட்டுனர்களுக்கு ஆபத்து
/
குண்டும், குழியுமான சாலை; ஓட்டுனர்களுக்கு ஆபத்து
ADDED : செப் 09, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி-கொளப்பலுார் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோபி-கொளப்பலுார் சாலையில், வேட்டைக்காரன் கோவில் பஸ் ஸ்டாப் உள்ளது. அப்பகுதியில் பிரதான சாலையில், பல இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே டூவீலர் போன்ற வாகனங்களில் பயணிப்போர், நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவ்வழியே இரவு நேரத்தில் பயணிப்போர், விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அப்பகுதியில் பேட்ச் ஒர்க் பணிகளையாவது செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.