ADDED : பிப் 17, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை : பெருந்துறையை அடுத்த மேட்டுக்கடையை சேர்ந்தவர் ராஜேந்திரன், 35; ஈரோட்டில் ரிங்ரோட்டில் ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறார்.
மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைதக்கு அழைத்து சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீடு திரும்பியபோது,ஸ வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி பெருந்துறை போலீசார், களவாணியை தேடி வருகின்றனர்.