/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும்; ஆனால் பஸ்கள் ஓடாது' முதல்வர் விழா குறித்து அமைச்சர் முத்துசாமி தகவல்
/
'பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும்; ஆனால் பஸ்கள் ஓடாது' முதல்வர் விழா குறித்து அமைச்சர் முத்துசாமி தகவல்
'பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும்; ஆனால் பஸ்கள் ஓடாது' முதல்வர் விழா குறித்து அமைச்சர் முத்துசாமி தகவல்
'பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும்; ஆனால் பஸ்கள் ஓடாது' முதல்வர் விழா குறித்து அமைச்சர் முத்துசாமி தகவல்
ADDED : நவ 25, 2025 02:24 AM
ஈரோடு, ஈரோட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை வந்து, நாளை அரசு விழாக்களில் பங்கேற்கிறார்.
இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் கந்தசாமி, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான ஆய்வு நடந்தது. அதில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு, 7:00 மணிக்கு ஈரோடு வந்து, காளிங்கராயன் விடுதியில் ஓய்வெடுக்கிறார். நாளை காலை, 8:30 மணிக்கு புறப்பட்டு ஜெயராமபுரத்தில் பொல்லான் மணிமண்டபம், சிலையை திறந்து வைக்கிறார். அங்கிருந்து தீரன் சின்னமலை நினைவிடம் சென்று மரியாதை செலுத்திவிட்டு, சோலார் பஸ் ஸ்டாண்டில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
மதியம் மீண்டும், காளிங்கராயன் இல்லம் வந்துவிட்டு மாலை, 4:30 மணிக்கு புறப்பட்டு சித்தோடு ஆவின் பால் பண்ணையில், பரமசிவம் சிலையை திறந்துவிட்டு, திருமண நிகழ்வில் பங்கேற்கிறார், பின்னர் கோவை வழியாக சென்னை செல்கிறார்.
சோலார் புதிய பஸ் ஸ்டாண்டை முதல்வர் திறந்து வைக்கிறார். பஸ் ஸ்டாண்ட் திறந்த பின், அரசு போக்குவரத்து கழகம், ஆர்.டி.ஓ., - தனியார் பஸ் அமைப்பு, ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் ஆகியோரை ஒன்றாக வைத்து, எவ்வாறு பஸ்கள், பிற வாகனங்கள் வந்து செல்ல வேண்டும் என்பது பற்றி பேசப்படும். இதற்கான முடிவை கலெக்டர் தலைமையில் எடுத்த பின் பஸ்கள் இயக்கப்படும்.
தீரன் சின்னமலை சிலைக்கான பணிகள் நடந்து வருகிறது. சிலை தயாராகவில்லை என்பதால், முதல்வர் வந்து மரியாதை செலுத்திவிட்டு செல்கிறார். பொல்லான் மணிமண்டபம் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் போராட்டம் அறிவித்தனர். அவர்களுக்கான விளக்கங்கள் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.
எம்.எல்.ஏ., சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

