ADDED : ஜூலை 22, 2026 06:27 AM

ஈரோடு:ஈரோட்டை
அடுத்த சோலாரில், 63.50 கோடி ரூபாய் மதிப்பில் புது பஸ் ஸ்டாண்ட்
கட்டப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக
பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பஸ் ஸ்டாண்டிற்குள் தனியார் பஸ்கள் வருவதில்லை. அரசு பஸ்கள்
மட்டுமே வந்து செல்கின்றன. டவுன் பஸ்களும் சொற்ப அளவிலேயே வந்து
செல்கிறது. இதனால் பயணிகள் நடமாட்டமின்றி பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி
காணப்படுகிறது.
குறிப்பாக கடந்த மார்ச் முதல் பஸ் ஸ்டாண்ட்
அபிவிருத்தி பணிகளும் எதிர்பார்த்த அளவில் இல்லை. இதன் எதிரொலியாக
பயணிகள் வருகையும் குறைந்து விட்டது. இரவில் குடிமகன்கள் பாராகவும்,
சமூக விரோத செயல்களும் அதிகரித்து விட்டன. பகலில் வாகன ஓட்டுனர்கள்,
வாகனம் ஓட்டி பழகும் இடமாக திகழ்கிறது. பஸ் ஸ்டாண்ட் எப்போதும்
வெறிச்சோடியே காணப்படுவதால், அங்கு செல்லும் ஒரு சில பயணிகளும்
அச்சத்துடனே இருக்க வேண்டிய நிலை உள்ளது.
