ADDED : பிப் 11, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
பு.புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி நகராட்சி, 13வது வார்டு தோட்டசாலை பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன், 60; இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் தோட்டத்திற்குள் புகுந்த தெருநாய்கள் கன்றுக்குட்டியை விரட்டி கடித்துள்ளது. 10க்கும் மேற்பட்டநாய்கள் கடித்ததில் ஒரு கன்றுக்குட்டி குடல் சரிந்து பலியானது.
சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர் தெரு நாய்களை விரட்டியடித்தனர்.
இங்குள்ள மழைநீர் ஓடையில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவை அவ்வப்போது ஆடு, கன்றுகளை கடிப்பது சமீபமாக அதிகரித்து விட்டது. உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
