வாய்க்காலில் தண்ணீர் திருட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வாய்க்காலில் தண்ணீர் திருட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : செப் 14, 2026 06:40 AM

அ நிறம் | அளவு
பவானி,:மேட்டூர்
அணையில் இருந்து மேற்கு கரை வாய்க்காலில், 400 கனஅடி வீதம், 15
நாட்களுக்கு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 7ம் தேதி முதல்
தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் மேட்டூர் வலது கரை
வாய்க்கால், காட்டூர் பகுதி, கடைமடை, வாய்க்கால்பாளையம்,
சின்னியம்பாளையம் வழியாக காடையாம்பட்டி கடைமடைக்கு நேற்று
முன்தினம் வந்தது. இந்நிலையில் வாய்க்காலில் மோட்டார் வைத்து தண்ணீர்
திருடுவதாக புகார்
எழுந்துள்ளது.
குறிப்பாக பவானி அருகே
வர்ணாபுரம் வாய்க்காலில் தண்ணீர் திருட்டு அதிகம் நடக்கிறது. இதனால்
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தண்ணீர் திருடுவோர் மீது
உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எழுந்துள்ளது.
