ADDED : மே 31, 2026 02:41 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பஞ்., அளவில் காலியாக உள்ள, 120 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. பிளஸ் 2 படித்த, தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க, கணக்கிடும் திறன் கொண்ட, 35 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
சுய
உதவிக்குழு, கூட்டமைப்பு உறுப்பினர், ஆன்ட்ராய்டு மொபைல்
வைத்திருப்போர், வங்கிகளுக்கு சென்று பண பரிவர்த்தனை செய்வோர்,
கடன் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் அனுபவம் கொண்டோர்
விண்ணப்பிக்கலாம்.
ஒப்பந்த அடிப்படையில் நியமனம் இருக்கும்.
உரிய சான்றிதழ்களுடன், நேரில் அல்லது தபாலில் சம்மந்தப்பட்ட பஞ்.,
அளவிலான கூட்டமைப்புக்கு வரும் ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க
வேண்டும். கூடுதல் தகவலை அந்தந்த பகுதி வட்டார அளவிலான கூட்டமைப்பு
அலுவலகத்தை அறியலாம்.
