வனத்தில் ஏற்படும் தீ குறித்து புகார், தகவல் தர அழைப்பு
வனத்தில் ஏற்படும் தீ குறித்து புகார், தகவல் தர அழைப்பு
ADDED : ஏப் 28, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
ஈரோடு :கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வனத்தில் காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு வனக்கோட்டத்தில் காட்டுத்தீ பரவலை குறைக்க, 372 ெஹக்டேரில் அந்நிய களைச்செடி அகற்றுதல், 235 கி.மீ.,க்கு தீத்தடுப்பு கோடு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும் வனத்தீ ஏற்பட்டால், மக்கள் தகவல் தர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில் வனத்தீ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. புகார், தகவல், கருத்துக்களை, 1800-425-1107 என்ற எண்ணில் தெரிவிக்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
