தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தேசிய கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு அழைப்பு

தேசிய கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு அழைப்பு

தேசிய கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு அழைப்பு


ADDED : செப் 25, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், தேசிய கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதர பிற்படுத்தப்பட்டோர் (பி.சி., - எம்.பி.சி., - டீ.என்.சி.,) பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், இத்திட்டம் மத்திய அரசால் செயல்படுகிறது.

விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர் https://scholarships.gov.in என்ற இணைப்பில் பதிவு செய்து, தங்கள் விண்ணப்பத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.நடப்பாண்டு புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 படிக்கும் பட்டியலிடப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் அதே தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us