பள்ளி காலை உணவு திட்டத்தில் பாத்திர கொள்முதலுக்கு அழைப்பு
பள்ளி காலை உணவு திட்டத்தில் பாத்திர கொள்முதலுக்கு அழைப்பு
ADDED : ஆக 16, 2026 06:16 AM

ஈரோடு;ஈரோடு
மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகளில், 6 முதல், 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு
காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கான
சமையல் பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. 50 கிலோ
கொள்ளளவு வட்டகை, கிளறும் இரும்பு கரண்டி, ஜல்லி கரண்டி, சாம்பார்
சில்வர் வாளி பெரியது, அரிவாள் மனை, சில்வர் பெரிய பேஷன், பெரிய
குழிக்கரண்டி, காஸ் அடுப்பு பித்தளை பர்னர், தண்ணீர் டிரம், 7.5
லிட்டர், 10, 15, 20, 25 லிட்டர் குக்கர்கள், அன்னக்கரண்டி, வட்டகை
மூடி, லைட்டர் பெரியது, கத்திரிக்கோல், காய்கறி நறுக்கும் கத்தி,
சாம்பார் கப் கரண்டி, பாதுகாப்பு பெட்டி - பூட்டு சாவியுடன், பிளாஸ்டிக்
டப்பா, இரும்பு கடாய் உட்பட, 27 வகை பொருட்கள் தேவை.
வரும், 20
மதியம், 3:00 மணிக்கு கலெக்டர் அலுவலக பழைய கட்டட வளாகம் தரைத்தள
கூட்டரங்கில், கலெக்டர் தலைமையிலான குழுவினர் விலைப்புள்ளி,
பாத்திர மாதிரிகளை ஆய்வு செய்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு
ஏற்ப, பாத்திரங்களின் கொள்ளளவு மாறுபடும். மதிப்பீட்டு குழுவினால்
நிர்ணயிக்கப்பட்ட விலை, தரம் இருக்க வேண்டும்.
இத்தகவலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
