/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓய்வூதிய உதவித்தொகை வீரர்களுக்கு அழைப்பு
/
ஓய்வூதிய உதவித்தொகை வீரர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 08, 2025 01:11 AM
ஈரோடு, நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை, 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக, ஈரோடு கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அரசு விளையாட்டு துறையில் வெற்றி பெற்று, தற்போது நலிந்ந நிலையில் உள்ள தமிழக முன்னாள் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திக்கு விண்ணப்பிக்கலாம். தேசிய போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றை பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கடந்த ஏப்.,30க்குள், 58 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மாத வருமானம், 6,000 ரூபாயாக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும், 30க்குள் பெற்று, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தண்ணீர்பந்தலில் சுகாதார நிலையம்
சென்னிமலை, ஜூலை 8
சென்னிமலை யூனியன் குமாரவலசு ஊராட்சி தண்ணீர் பந்தலில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படுகிறது. இதற்கான பூஜை நேற்று நடந்தது. சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செங்கோட்டையன், யூனியன் முன்னாள் தலைவர் காயத்ரி, ஊராட்சி முன்னாள் தலைவர் இளங்கோ, பூஜை நடத்தி பணியை தொடங்கி வைத்தனர்.