/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெற அழைப்பு
/
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெற அழைப்பு
ADDED : ஜூலை 11, 2025 01:00 AM
ஈரோடு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம், 200 ரூபாய், தேர்ச்சி பெற்றோருக்கு, 300 ரூபாய், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோருக்கு, 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வழங்கப்
படுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவை புதுப்பித்தவர்கள், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் இப்பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்திருந்தால்
உதவித்தொகை பெற தகுதியானவர்கள். https;//tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelailaaippu.gov.in என்ற இணைய தளம் மூலமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே உதவித்தொகை பெறுவோர், சுய உறுதி மொழி ஆவணங்களை நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

