சோலார் பம்ப்செட், மின் வேலி திட்டத்தில் பயன்பெற அழைப்பு
சோலார் பம்ப்செட், மின் வேலி திட்டத்தில் பயன்பெற அழைப்பு
ADDED : செப் 04, 2026 06:09 AM
ஈரோடு:விவசாயிகளுக்கு
தற்போது மின் மோட்டார், பம்ப்செட் அமைக்க மானியம்
வழங்கப்படுகிறது.
பழைய மோட்டார் பம்ப்செட்களை மாற்றி அல்லது
புதிதாக உருவாக்கப்பட்ட கிணறுகளுக்கு குறைந்தபட்சம், நான்கு
நட்சத்திர தர குறியீடு பெற்ற புதிய திறன் வாய்ந்த மின் மோட்டார் -
பம்ப்செட்களை வாங்க மானிய உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு புதிய
மோட்டார் - பம்ப்செட் வாங்க ஆகும் மொத்த செலவில், 15,000 ரூபாய் அல்லது
50 சதவீதம் என இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.அதிலும்
நீர் பாசனத்துக்கான மின்சார தேவையை உறுதி செய்ய, சூரிய ஆற்றல்
பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சோலார் சக்தியால் இயங்கும்
பம்புசெட்களை விவசாயிகளுக்கு மானியத்தில் அமைக்கவும் மானியம்
வழங்கப்படுகிறது. இத்தகவலை ஈரோடு மாவட்ட வேளாண் பொறியியல் துறை
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
