/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு
/
கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : டிச 06, 2025 03:08 AM
ஈரோடு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்-பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரிகளில், 3ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிய-ருக்கு, எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இளங்கலை, முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருவாய், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26ம் கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை வேண்டி, https://umis.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலம் வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்ப-டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.

