ADDED : நவ 22, 2026 06:34 AM
ஈரோடு;ஈரோடு
மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய நலவாழ்வு குழுமம், மருத்துவம் மற்றும்
ஊரக சுகாதாரப்பணிகள் கட்டுப்பாட்டில், விரிவான அவசர கால மகப்பேறு
மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில்
ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக செவிலியர்
பணியிடங்களில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 'நிர்வாக செயலர், மாவட்ட சுகாதார
அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், திண்டல், ஈரோடு-12, போன்: 0424
2431020' என்ற முகவரிக்கு வரும் டிச.,4ம் தேதி மாலை, 5:00 மணிக்குள்
வழங்க வேண்டும். 50 வயதுக்கு உட்பட்ட செவிலியர் பட்டய படிப்பு,
பி.எஸ்.சி., நர்சிங், அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார்
செவிலியர் கல்லுாரிகளில் படித்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவு
செய்தோர் விண்ணப்பிக்கலாம். மாதம், 21,000 ரூபாய் ஊதியமாக
வழங்கப்படும்.
