ADDED : மே 02, 2025 01:29 AM
ஈரோடு:படித்த வேலைவாய்ப்பற்ற ஆர்வமுள்ள இளைஞர்கள், புதிதாக தொழில் துவங்கும் வகையில், 'படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யூ.ஒய்.இ.ஜி.பி.,)' மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்துகிறது.
வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு, 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 18 முதல், 45 வயது உடைய பொது பிரிவினர் விண்ணப்பிக்கலாம். பிறர், 55 வயது வரை விண்ணப்பிக்கலாம். சுய தொழில் துவங்குவோர், www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணைய தளம் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதிக்கான சான்று, ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை, ஜாதிச்சான்று ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வங்கி கிளைகளுக்கு பரிந்துரைக்கப்படும். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை (போன்: 0424 2275283, 2275440) அணுகலாம்.

