ADDED : அக் 07, 2026 06:31 AM

அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை
அடுத்த ஆசனுார் மலையில் இரண்டு நாட்களுக்கு முன் சிறுத்தை தாக்கியதில்
பழங்குடி இளைஞர் பலியானார்.
மறுநாள் அதே இடத்துக்கு வந்த சிறுத்தை இரு
நாய்களை தாக்கி கொன்றது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து
சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, 20 இடங்களில் கேமராக்கள்
பொருத்தினர். மேலும் டிரோன் கேமரா மூலமும் தொடர்ந்து கண்காணிப்பில்
ஈடுபட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
