/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு முகாம்
/
மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு முகாம்
ADDED : டிச 08, 2024 01:07 AM
மாநகராட்சி துாய்மை
பணியாளர்களுக்கு முகாம்
ஈரோடு, டிச. 8-
மாநகராட்சி சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் துவக்கி வைத்தார். முகாமில் நான்கு மண்டலங்களில் பணியாற்றும் நிரந்தர தூய்மை பணியாளர், செப்டிக் டேங்க் வாகன ஓட்டுனர்கள், பணியாளர், பாதாள சாக்கடை துாய்மை பணியாளர் என, 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, பல், கண், எலும்பு, தோல் சிகிச்சை பரிசோதனை, இதய நோய் பரிசோதனை நடந்தது. நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.