தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்


ADDED : ஏப் 04, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம் :

காங்கேயம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம், காங்கேயத்தில் நேற்று நடந்தது. கோவை மண்டல பொறுப்பாளர் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், வேட்பாளர் நடராஜை அறிமுகம் செய்தனர். இதில் வேலுமணி பேசியதாவது:

காங்கேயம் தொகுதி அ.தி.மு.க., கோட்டை. கூட்டணி கட்சிகளை அரவணைத்து செயல்பட வேண்டும். நம் நோக்கம் பழனிசாமி முதலமைச்சராக வேண்டும். சட்டசபை தேர்தல் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல் வரவுள்ளது.

அதில் நம் கட்சியில் சிறந்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இவ்வறு பேசினார்.

கூட்டத்தில் காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர், மாவட்ட பொறுப்பாளர் உள்பட, 2,000 பேர் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலத்தில்...

மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை வகித்தார். இதில் நீலகிரி எம்.பி., ராஜா பங்கேற்று, பவானிசாகர் தொகுதி வேட்பாளரான இ.கம்யூ., கட்சியை சேர்ந்த சுந்தரத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அவர் பேசுகையில், 'அரசியல் சட்டம் இருப்பதால் தான் சிறுபான்மை, தலித் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்த தேர்தல் பவானிசாகருக்கான தேர்தல் அல்ல, தமிழகத்துக்கான தேர்தல் அல்ல, இந்தியாவிற்கான தேர்தல். அரசியலமைப்பு சட்டத்திற்கான தேர்தல். இதை மனதில் வைத்து ஓட்டளியுங்கள்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us