/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மளிகை கடை ஊழியரிடம் கஞ்சா சாக்லெட் பறிமுதல்
/
மளிகை கடை ஊழியரிடம் கஞ்சா சாக்லெட் பறிமுதல்
ADDED : நவ 24, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி அருகே காமராஜ் நகர் பகுதியில், சிறுவலுார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அதே பகுதியில் ஒரு மளிகை கடையை சோதனை செய்தபோது, 49 கஞ்சா சாக்லெட் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் கடை தொழிலாளியான திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சந்தன், 37, என தெரிந்தது. கடந்த இரு வாரங்களாக வேலை செய்து வருவதாகவும், கடை உரிமையாளர் வெளியூர் சென்றிருப்பதும் தெரியவந்தது. சந்தனை கைது செய்து கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

