ADDED : நவ 19, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் அருகே, நேற்று முன்தினம் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த, திருப்பூர் புதுார் அனுப்பர்பாளையத்தில் வசிக்கும் மதன்குமார், 23, என்பவரிடம், ஈரோடு மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் ஒன்றரை கிலோ எடையில் கஞ்சா சாக்லேட் இருந்தது. பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்.
* கண்ணுடையாம்பாளையத்தில், 100 கிராம் கஞ்சாவுடன், மொடக்குறிச்சி முத்தாயிபாளையம் புஞ்சை காளமங்கலம், கண்ணுடையாம்பாளையம் சுகுமாரை, 25, மலையம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

