ADDED : ஏப் 12, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை, வரும், 14ம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அன்றைய தினம் தமிழ் கடவுளான முருகப்பெருமான ஆலயங்களுக்கு, மக்கள் படையெடுப்பர். இதன்படி சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் செல்வர்.
மேலும் அன்றைய தினம் செவ்வாய்க்கிழமையாக உள்ளது.
இரு மடங்கிலான மக்கள் வருவர். இதனால் மலைப்பாதையில் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, அன்றைய தினம் மலைப்பாதையில் கார்கள் செல்ல, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. திருக்கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்களை, பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
