ADDED : செப் 26, 2026 06:57 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை
போக்குவரத்து போலீசார், சிப்காட் சோதனைச்சாவடியில், நேற்று
முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வந்த ஒரு கார் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்து துரத்தி, பழைய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் மடக்கினர்.
காரில்
இருவர் இருந்தனர். விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த
ஸ்வப்னில் நாக்னே, 35, அக்சய், 37, என தெரிந்தது. கோவையில் தங்கம்,
வெள்ளியை பிரித்தெடுக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியர்களாக
பணிபுரிவதாக தெரிவித்தனர். காரை சோதனை செய்ததில், 1.65 கோடி ரூபாய்
இருந்தது.
ஆனால் உரிய ஆவணம் எதுவுமில்லை. இதையடுத்து உயர் அதிகாரி
கள்
ஆலோசனைப்படி, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணத்தை
ஒப்படைத்தனர். ஹவாலா பணமா என்பது குறித்து விசாரணை நடப்பதாக
போலீசார் தெரிவித்தனர்.
