ADDED : செப் 06, 2026 05:49 AM

அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:ஈரோடு
திண்டலை சேர்ந்த கோகுல், 25, சுரேஷ், 38, ஆகியோர், ரெனால்ட் காரில்,
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் நேற்று சென்றனர்.
மலைப்பாதையில், 21வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது பானட் பகுதியில்
திடீரென புகை வந்தது. உடனடியாக காரை ஓரம் கட்டி நிறுத்தி இருவரும்
இறங்கினர். சில நிமிடங்களில் கார் கொழுந்து விட்டு எரிய
தொடங்கியது. ஆசனுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது.
தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும்
கார் எரிந்து விட்டது. இதனால் மலைப்பாதையில் பரபரப்பு ஏற்பட்டது.
