ADDED : செப் 28, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:ஈரோட்டை
சேர்ந்த முகமது அகில், 24, நிஷாந்த், 23; ஐ.டி., கம்பெனி ஊழியர்கள்.
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாக போர்டு காரில்,
நேற்றிரவு, 8:00 மணியளவில் சென்றனர். 26வது கொண்டை ஊசி வளைவில்
வரும்போது தீடீரென காரில் இருந்து புகை வந்தது.
இருவரும் உஷாராகி
இறங்கிய நிலையில், சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
ஆசனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும் கார் எரிந்து விட்டது.
