ADDED : மே 23, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
ஆசனுார்:தாளவாடி அருகேயுள்ள மல்லன் குழியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ், 42; கோவை சென்றுவிட்டு தாளவாடியை நோக்கி ஆசனுார் வழியாக, ஸ்விப்ட் காரில் நேற்று மதியம் சென்றார்.
காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே சென்றபோது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டெருமை, கார் மீது மோதி விட்டு சென்றது. இதில் காரின் முன் பகுதி சேதமானது. ஸ்டீபன் ராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
