/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணிடம் சீண்டல் கார் டிரைவர் கைது
/
பெண்ணிடம் சீண்டல் கார் டிரைவர் கைது
ADDED : டிச 08, 2024 01:11 AM
பெண்ணிடம் சீண்டல் கார் டிரைவர் கைது
அந்தியூர், டிச. 8--
அந்தியூர் அருகே பெம்மன்பட்டியை சேர்ந்தவர் செல்வி, 40, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். சமையல் தொழிலாளியான இவர், ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டு, நள்ளிரவில் அந்தியூர் திரும்பினார். அங்கிருந்து கிராமத்துக்கு செல்ல பஸ் இல்லாததால், வாடகை காரில் செல்ல முடிவு செய்தார். காரில் சென்றபோது இருட்டான இடத்தில் நிறுத்திய டிரைவர் அலாவுதீன், செல்வியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் சத்தமிடவே அங்கேயே இறக்கி விட்டுவிட்டு, காரை ஓட்டி சென்று விட்டார். இதுகுறித்து அந்தியூர் போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அலாவுதீன் போலீசில் நேற்று
காலை சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.