தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியது 12 மணி நேர மின்தடையால் அவதி

டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியது 12 மணி நேர மின்தடையால் அவதி

டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியது 12 மணி நேர மின்தடையால் அவதி


ADDED : ஆக 09, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2025 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, அம்மாபேட்டை, பவானி சாலையில் கரிய காளியம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணயிளவில், பவானியை நோக்கி சென்ற போர்டு பிகோ கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. காரை ஓட்டி வந்தது சித்தோடு, கோஆப்ரேடிவ் காலனியை சேர்ந்த சிவில் இன்ஜினியர் கவுதமன், 31, என தெரியவந்துள்ளது.இவர் நேற்று முன்தினம் காலை, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள சொந்த ஊருக்கு காரில் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில், டிரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு சத்தம் வந்ததால், அக்கம்பக்கத்தினர் வந்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்தனர். மின்தடையால், பழைய மாரியம்மன் கோவில் வீதி, குபேரன் நகர், சிவசக்தி நகர், சாய் நகர், ஜலகண்டாபுரம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை, 10:00 மணி வரை மின்சாரம் இன்றி, இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

அம்மாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us