ADDED : ஜன 07, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தமிழகத்தில் ரயில்வே, வங்கி, அஞ்சல், தொலைத்தொடர்பு துறைகளில், ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து, தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்ததாக கூறி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், ஈரோட்டில் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டம் நடந்தது.
இதில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை-யிலான, 39 பேர் மீதும், சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
