/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2 பிசியோதெரப்பிஸ்டுகள் பலி அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
/
2 பிசியோதெரப்பிஸ்டுகள் பலி அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
2 பிசியோதெரப்பிஸ்டுகள் பலி அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
2 பிசியோதெரப்பிஸ்டுகள் பலி அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
ADDED : அக் 04, 2025 12:55 AM
பவானி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தேஜஸ், 28; நீலகிரி மாவட்டம் அப்பாக்காட்டை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 27; இருவரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில், பிஸியோதெரப்பிஸ்ட்டாக பணிபுரிந்தனர். விடுமுறையில் வீட்டுக்கு செல்வ
தற்காக, டியூக் பைக்கில் இருவரும், பெங்களூரில் இருந்து புறப்பட்டனர்.
நேற்று முன்தினம் காலை, ௮:௦௦ மணிக்கு, பவானி - மேட்டூர் நெடுஞ்சாலையில், சன்னியாசிப்பட்டி அருகே வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். ஜெயஸ்ரீயின் உறவினர்கள் அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்
பதிவு செய்ய வலியுறுத்தி, பவானி அரசு மருத்துவமனையை நள்ளிரவில் முற்றுகையிட்டனர். இதன் அடிப்படையில் பவானி தொட்டிபாளையத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சசிகுமார், ௪௩, மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.