ADDED : ஏப் 27, 2026 04:06 AM
ஈரோடு:ஈரோட்டை
அடுத்த சோலார் இரணியன் வீதியில், கொடுமுடி சாலைபுதுார்
குப்பம்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய பணியாளர்
செல்லப்பன், 76, புதிதாக வீடு
கட்டுகிறார்.
கட்டட
மேஸ்திரியான ஈரோடு விளக்கேத்தி காமராஜ் நகரை சேர்ந்த தேவராஜ், 44,
தொழிலாளியான சிவகிரி எல்.பி.பி தெருவை சேர்ந்த முத்தையா மனைவி
மாரியம்மாள், 55, நேற்று முன் தினம் காலை கட்டடத்தின் மூன்றாவது
தளத்தில் மணலை கொண்டு செல்ல, மணல் அள்ளும் இயந்திரம் வைத்து செட்
செய்தனர். சரியான முறையில் பொருத்தாமல் இயங்க செய்தனர். பாரத்தை
தாங்கி நிற்க வழியில்லாததால் நிலை தடுமாறி இயந்திரம் வேகமாக வந்தது.
இருவரும் இயந்திரத்துக்கு சேதம் ஏற்பட்டு விட கூடாது
என்பதற்காக தாங்கி பிடித்து உள்ளே கொண்டு வர முற்பட்டனர். அப்போது
இயந்திரத்தின் பாரத்தை தாங்க முடியவில்லை. மாறாக இயந்திரத்துடன்
அடுத்தடுத்து இருவரும் தரையில் விழுந்தனர். தலையில் பலத்த காயமடைந்து
சம்பவ இடத்தில் பலியாகினர். இது தொடர்பாக ஈரோடு தாலுகா போலீசார்,
வீட்டு உரிமையாளர் செல்லப்பன் மற்றும் சிவகிரி காந்திஜி வீதியை
சேர்ந்த இன்ஜினியர் சேகர், 56, மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
