தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போதையில் கார் இயக்கி ரகளை எல்.ஐ.சி., முகவர் மீது வழக்கு

போதையில் கார் இயக்கி ரகளை எல்.ஐ.சி., முகவர் மீது வழக்கு

போதையில் கார் இயக்கி ரகளை எல்.ஐ.சி., முகவர் மீது வழக்கு


ADDED : நவ 21, 2024 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2024 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போதையில் கார் இயக்கி ரகளை

எல்.ஐ.சி., முகவர் மீது வழக்கு

ஈரோடு, நவ. 21-

ஈரோட்டில், போதையில் கார் ஓட்டி ரகளையில் ஈடுபட்ட எல்.ஐ.சி., முகவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு காளைமாட்டு சிலை அருகே நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த சிலர், இ.வி.என். சாலையில் மதுபோதையில் கார் ஓட்டிய நபர், லாரி, டூவீலர்கள் மீது உரசியபடி சென்றதாக, இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தனர்.

அதற்குள் அந்த கார், காளை மாட்டு சிலையை கடந்து, ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி அருகே சென்றது. போக்குவரத்து போலீசார் துரத்தி சென்று காரை வழிமறித்தனர். காரில் இருந்த நபரை கீழே இறக்கியபோது, அவர் போதையில் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், சிவகிரியை சேர்ந்த எல்.ஐ.சி., முகவர் சேதுராமன், 45, என்பதும், இ-சேவை மையம் நடத்தி வருவது தெரியவந்தது. பின் லைசன்ஸ், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை காட்டுமாறு போலீசார் கேட்டனர். ஆத்திரமடைந்த சேதுராமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடம் ப்ரீத்திங் அனலைசர் பரிசோதனை செய்தனர். இதில், மது குடித்தது உறுதியானது. இதையடுத்து, சேதுராமனை ப.செ.பார்க் பகுதிக்கு போலீசார் அழைத்து வந்தனர். பின், சேதுராமனின் உறவினரை வரவழைத்து, அவரது மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை போலீசார் ஒப்படைத்தனர். காரை பறிமுதல் செய்தனர். சேதுராமன் மீது போதையில் வாகனம் இயக்கியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக வாகனம் இயக்கியது, ஆவணங்களை சமர்பிக்காதது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us