தொழிலாளி மீது தாக்குதல் மில் அதிபர்கள் மீது வழக்கு
தொழிலாளி மீது தாக்குதல் மில் அதிபர்கள் மீது வழக்கு
ADDED : மார் 20, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை,: பவானியை அடுத்த ஜம்பை, பாரதி நகரை சேர்ந்தவர் மயில்சாமி, 52, வெல்டிங் தொழிலாளி. பெருந்துறையை அடுத்த காஞ்சிக்-கோவில், தண்ணீர் பந்தல் பாளையத்தில், தேங்காய் நார் மில் வைத்துள்ள குமார் மற்றும் மூர்த்தி, வெல்டிங் வேலை இருப்ப-தாக கூப்பிட்டுள்ளனர்.
கடந்த, 16 ம் தேதி காலை மயில்சாமி வேலைக்கு சென்றார். இரவான நிலையில் மறுநாள் வந்து வேலை செய்வதாக கூறியுள்ளார். இரவு மில்லில் தங்கி மறுநாள் காலையில் மீதி வேலையை முடித்து தருமாறு இருவரும் கூறி-யுள்ளனர். இதை ஏற்க மறுத்து, மயில்சாமி வீட்டுக்கு புறப்பட்-டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், மயில்சாமியை மாமரத்தில் கட்டி வைத்து, தகாத வார்த்தை பேசி தாக்கியுள்-ளனர். இதுகுறித்த புகாரின்படி காஞ்சிக்கோவில் போலீசார், குமார் மற்றும் மூர்த்தி மீது, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
