ADDED : ஜன 13, 2025 02:58 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பல்லக்காபாளையம், ஆயகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 27; கூலி தொழிலாளியான இவர், பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு ஆசை காட்டி திருமணம் செய்ததில், அவர் கர்ப்பமானார்.
இது-பற்றி அறிந்த குழந்தைகள் நல குழுவினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், லோகநாதன் மீது குழந்தை திருமண தடை சட்ட பிரிவு, போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
