/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு
/
தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : நவ 25, 2025 01:47 AM
கோபி,கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் செல்வம், 43, கூலி தொழிலாளி; கடந்த, 22ம் தேதி இரவு கோபியில் தனியார் பாரில் நண்பர்களுடன் மது அருந்தினார். கோபியை சேர்ந்த மகேஷ்வரன், 40, சுரேஷ், 40, ஆகியோர் பக்கத்து டேபிளில் மது அருந்தினர்.
இந்நிலையில் செல்வத்திடம், தான் சாப்பிட்ட பில்லுக்கும் சேர்த்து தொகையை செலுத்துமாறு சுரேஷ் கூறியுள்ளார். பணம் இல்லை எனக்கூறி விட்டு, பாருக்கு வெளியே சென்று நண்பர்களுடன் சென்று பேசி கொண்டிருந்தார்.அங்கு சென்ற சுரேசும், மகேஷ்வரனும் சேர்ந்து, செல்வத்தை தகாத வார்த்தை பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். செல்வம் புகாரின்படி இருவர் மீதும், கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

