தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுவலுாரில் மீண்டும் இயங்காத மாட்டுச்சந்தை

சிறுவலுாரில் மீண்டும் இயங்காத மாட்டுச்சந்தை

சிறுவலுாரில் மீண்டும் இயங்காத மாட்டுச்சந்தை


ADDED : ஜன 16, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: சிறுவலுாரில் மாட்டுச்சந்தை ஓராண்டாக இயங்காததால், வியா-பாரம் கேள்விக்குறியாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி யூனியனுக்கு உட்பட்ட சிறுவலுார் பஞ்., அலுவலகம் அருகே, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இயங்கிய மாட்டு சந்தை, 1999ல் நிறுத்தப்பட்டது. இதனால் சிறு-வலுார், திங்களூர், வெள்ளாங்கோவில் உள்ளிட்ட பகுதி விவசா-யிகள், கால்நடைகளை வாங்கவும், விற்பனை செய்யவும், அந்-தியூர், சீனாபுரம், ஈரோடு மாட்டுச்சந்தைக்கு சென்றனர்.இதனால் பஞ்சாயத்து நிர்வாகம், 2024 செப்.,10ல் மாட்டுச்சந்-தையை மீண்டும் துவங்கியது. அதன்பின் மூன்று மாதங்கள் மட்-டுமே செயல்பட்ட மாட்டுச்சந்தை, ஓராண்டாக இயங்கவில்லை. இதனால் சந்தை வளாகம் முதல், மாடுகள் தண்ணீர் குடிக்க பயன்-படுத்திய தொட்டி வரை வீணாக கிடக்கிறது. மாட்டுச்சந்தையை மீண்டும் கொண்டு வர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

மாட்டுச்சந்தை துவங்கிய போது துவக்கத்தில், 100 மாடுகள் சரா-சரியாக வந்தது. இதனால் வியாபாரி மற்றும் விவசாயிகளை நம்பி, இரு டீக்கடை மற்றும் டிபன் சென்டர் இயங்கியது. சரக்கு ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரமும் நன்றாக இருந்தது. கிராமத்தின் பொருளாதாரமும்

உயர்ந்தது.

தற்போது சந்தை இயங்காததால் நிலைமை தலைகீழாக மாறி-யுள்ளது. சிறுவலுாரில் மாட்டுச்சந்தை இயங்குவதை, பிற தாலுகா-வுக்கும் பஞ்., நிர்வாகம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போது தான் பலரும் அறிந்து, வியாபாரமும் நன்றாக இருக்கும். மாட்டுச்-சந்தை மீண்டும் இயங்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

இதுகுறித்து கோபி யூனியன்

அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சிறுவலுார் மாட்டுச்சந்தைக்கு தேவையான வசதிகள் உள்ளன. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் ஆர்வமில்லாததே, சந்தை இயங்காததற்கு முக்கிய காரணமாக உள்ளது. விவசாயிகள் மற்றும்

வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுத்தால், மீண்டும் அதே இடத்தில் சந்தை இயங்க, பஞ்சாயத்து நிர்வாகம் தயாராக உள்-ளது.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us