ADDED : ஏப் 29, 2026 06:15 AM
திருப்பூர்:இந்தியாவில் பருத்தி சாகுபடியில் மாற்றமில்லை என்றாலும், பஞ்சு உற்பத்தி குறைந்து விட்டது. சர்வதேச அளவில், பஞ்சு விலை உயர்ந்துள்ளதால், இந்திய பருத்திக்கழகம், அதே அளவுக்கு விலை உயர்த்தி, பஞ்சு விற்பனையை வேகப்படுத்தியுள்ளது.
ஒரு கேண்டிக்கு (356 கிலோ), 600 முதல், 1,000 ரூபாய் வரை விலையை உயர்த்தி விற்பனை செய்கிறது. இதனால் பருத்தி பஞ்சு விலை, கேண்டி, 61 ஆயிரத்து, 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. லாபம் கிடைப்பதால், விவசாயிகளிடம் வாங்கிய பஞ்சை, விற்பனை செய்வதில் சி.சி.ஐ., ஆர்வம் காட்டுவதாக ஜவுளித்துறையினர் கூறுகின்றனர்.
கடந்த, 24ம் தேதி நிலவரப்படி, அக்., மாதத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு, 20.82 லட்சம் பேல் விற்பனை செய்யபப்டுள்ளது. தெலங்கானாவுக்கு, 10.25 லட்சம், குஜராத்துக்கு, 9.48 லட்சம் பேல்களும் விற்பனையாகியுள்ளது.
இதுகுறித்து நுாற்பாலைகள் துறையினர் கூறுகையில், 'தற்போது, உள்நாட்டில் பஞ்சு தட்டுப்பாடு இல்லை; இருப்பினும், சர்வதேச விலைக்கு நிகராக, பஞ்சு விலையை உயர்த்துகின்றனர். பஞ்சை நுாற்பாலைகளுக்கு மட்டும் விற்க வேண்டும்,' என்றனர்.
