ADDED : நவ 29, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:திருப்பரங்குன்றம்
கோவில் தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட்டதை கொண்டாடும் விதமாக,
சென்னிமலை ஒன்றிய இந்து முன்னணி சார்பாக, சென்னிமலையில் ஏகாந்த
வெங்கடேச பெருமாள் கோவிலில், இந்து முன்னணியினர் நேற்று மாலை தீபம்
ஏற்றியும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஒன்றிய இந்து முன்னணி தலைவர் சின்னச்சாமி, பா.ஜ., கட்சி தெற்கு மாவட்ட
செயலாளர் ஞானவேல், சென்னிமலை ஒன்றிய தலைவர் ரமேஷ், மதன் உட்பட
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
